/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சைசிங் மில்லால் மாசு; பொதுமக்கள் புகார்சைசிங் மில்லால் மாசு; பொதுமக்கள் புகார்
சைசிங் மில்லால் மாசு; பொதுமக்கள் புகார்
சைசிங் மில்லால் மாசு; பொதுமக்கள் புகார்
சைசிங் மில்லால் மாசு; பொதுமக்கள் புகார்
ADDED : ஆக 01, 2011 10:08 PM
திருப்பூர் : 'பூமலூர் அருகே செயல்படும் சைசிங் மில்லில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபடுகிறது,' என, கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.பூமலூர் அடுத்த மலையம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.அதன் விவரம்:
மலையம்பாளையம் கிராமத்தின் மேற்குப்பகுதியில் சைசிங் மில் செயல்படுகிறது.
இங்குள்ள ராட்சத பாய்லரில் தண்ணீர் கொதிக்க வைக்க விறகுகள் தீ மூட்டப்படுகின்றன. இதிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை, சுற்றுப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பு மற்றும் குடியிருப் புகளில் பரவி பெரும் மாசை விளைவிக்கிறது; அதனால், காற்று மாசுபடுகிறது.கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இம்மில்லில் விறகுகளை எரிக்க, தீப்பற்றும் தன்மை கொண்ட ஒரு ரசாயனத்தை பயன்படுத்துவதாகத்தெரிகிறது. இதனால், நச்சுப்புகை வெளியேறி, சுவாசக்கோளாறு மற்றும் சுகாதாரக்கேடு விளைகிறது. புகை போக்கியின் அளவு, மாசுக்கட்டுப்பாடு விதிகளை மீறி, குறைவான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளனர்.