/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஈராடு விபத்தில் மூவர் பலி ரூ.11.5 லட்சம் நஷ்ட ஈடுஈராடு விபத்தில் மூவர் பலி ரூ.11.5 லட்சம் நஷ்ட ஈடு
ஈராடு விபத்தில் மூவர் பலி ரூ.11.5 லட்சம் நஷ்ட ஈடு
ஈராடு விபத்தில் மூவர் பலி ரூ.11.5 லட்சம் நஷ்ட ஈடு
ஈராடு விபத்தில் மூவர் பலி ரூ.11.5 லட்சம் நஷ்ட ஈடு
ADDED : செப் 30, 2011 11:05 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ராஜபாளையம் சோழபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி,40, இவர் சோழபுரம் தேசிகாபுரத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் டிராக்டரை ஓட்டி வந்தார்.
கடந்த 2003 ஆக.16ம் தேதி தென்காசி மெயின்ரோட்டில், சுந்தர நாச்சியார்புரம் மாதா கோயில் அருகே செங்கல் லோடு ஏற்றிவரும் போது, டிராக்டரின் பின் சக்கரம் வெடித்து நிலை தடுமாறி ஓடியதில், ராஜபாளயைம் பரதேசி ஊரணி தெருவை சேர்ந்த மெக்கானிக் காமராஜ்,27, வந்த மொபட் மீது மோதியதில் தீப்பிடித்தது. இதில் அவரும், டிரைவர் பெரியசாமியும் பலியாயினார். அவ்வழியே சைக்கிளில் சென்ற அந்தோணி சாமி, 55, தீக்கு பலியானார். அவர்களது குடும்பத்தினர் ஸ்ரீவி., மாவட்ட கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், நீதிபதி கிருஷ்ண மூர்த்தி, விபத்தில் இறந்த டிரைவர் பெரியசாமி குடும்பத்திற்கு டிராக்டர் உரிமையாளர் ராமசாமி 4.24 லட்சம் ரூபாயும், காமராஜ் குடும்பத்திற்கு ராமசாமி, மொபட் உரிமையாளர் ஜெயக்குமாரும் சேர்ந்து 3.92 லட்சம் ரூபாயும், அந்தோனி குடும்பத்திற்கு ஜெயக்குமார் 3.34 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டார்.