/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மானாமதுரையில் குழாயில் உடைப்பால் வீணாகும் நீர்மானாமதுரையில் குழாயில் உடைப்பால் வீணாகும் நீர்
மானாமதுரையில் குழாயில் உடைப்பால் வீணாகும் நீர்
மானாமதுரையில் குழாயில் உடைப்பால் வீணாகும் நீர்
மானாமதுரையில் குழாயில் உடைப்பால் வீணாகும் நீர்
ADDED : ஆக 26, 2011 11:29 PM
மானாமதுரை : மானாமதுரை கீழ்கரையில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக பேரூராட்சி சார்பில் ராஜகம்பீரம் வைகை ஆற்று பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப் பட்டுள்ளன.
இங்கிருந்து குழாய் மூலம் காந்தி சிலை அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.பாலத்தின் மேல் பகுதியில் வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாகி குளம் போல் தேங்கி நிற்கிறது.சில நேரங்களில்குழாயில் அடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநியோகம் தடைபடுகிறது.இப்பகுதியில் உள்ள குழாயை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்கலாம்


