/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் வெயிலை சமாளிக்க காலிங்கராயனில் சிறுவர்கள் தஞ்சம்ஈரோட்டில் வெயிலை சமாளிக்க காலிங்கராயனில் சிறுவர்கள் தஞ்சம்
ஈரோட்டில் வெயிலை சமாளிக்க காலிங்கராயனில் சிறுவர்கள் தஞ்சம்
ஈரோட்டில் வெயிலை சமாளிக்க காலிங்கராயனில் சிறுவர்கள் தஞ்சம்
ஈரோட்டில் வெயிலை சமாளிக்க காலிங்கராயனில் சிறுவர்கள் தஞ்சம்
ADDED : ஜூலை 12, 2011 12:41 AM
ஈரோடு : ஈரோட்டில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், காவிரி மற்றும் காலிங்கராயன் வாய்க்காலை தேடி வருகின்றனர்.
ஜூன் 6ம் தேதி காவிரியிலும், 19ம் தேதி காலிங்கராயனிலும் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆறு மற்றும் கால்வாய் நிரம்பி தண்ணீர் செல்வதால், கோடையில் தண்ணீருக்கு சிரமப்பட்டு வந்த ஆற்றோர பொதுமக்கள், தற்போது வீடுகளில் இருந்து துணி எடுத்துச் சென்று, கால்வாயில் துவைத்தும், குளித்தும் வருகின்றனர். நகரில் சில நாட்களாகவே கடுமையான வெயில் அடிக்கிறது. காலை 7 மணிக்கே சுளீரென வெயில் அடிக்க துவங்கி, மதியம் உச்சத்தை அடைகிறது. வெயிலுக்கு பயந்து, பொதுமக்கள் வெளியே வராமல், வீட்டுக்குள் முடங்கி விடுகின்றனர். பகல் நேரத்தில் கடும் வெயிலால் வாகனங்கள் ஏதும் செல்லாமல், பெரும்பாலான ரோடுகள் வெறிச்சோடி கிடக்கின்றன. காலையிலேயே, காவிரி ஆறு மற்றும் காலிங்கராயன் வாய்க்காலில் மக்கள் கூட்டம் குவிகிறது. சிறுவர், பெரியவர்கள் என அனைவரும், காலையிலேயே தண்ணீரில் இறங்கியவர்கள், மதியம் வரையிலும், வெளியே வர மனமின்றி, தண்ணீரில் நீந்தி விளையாடி மகிழ்கின்றனர். சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ஆறு மற்றும் கால்வாயில் மக்கள் கூட்டம் அதிகம் குவிகிறது. அதுபோல், காவிரி மற்றும் காலிங்கராயன் வாய்க்காலில், ஒதுக்குப்புறமான இடங்களில், வயது வித்தியாசமின்றி, சரக்கு பாட்டிலுடன் கூட்டமாக அமர்ந்து, குடித்து விட்டு, போதையில், விபரீதத்தை உணராமல், நீச்சல் அடித்து விளையாடி வருகின்றனர்.