/உள்ளூர் செய்திகள்/சேலம்/6 பேர் கொலையான வீடு தீப்பிடித்த சம்பவம் : மூன்று பேர் கால்தடம் பதிவு செய்த போலீஸார்6 பேர் கொலையான வீடு தீப்பிடித்த சம்பவம் : மூன்று பேர் கால்தடம் பதிவு செய்த போலீஸார்
6 பேர் கொலையான வீடு தீப்பிடித்த சம்பவம் : மூன்று பேர் கால்தடம் பதிவு செய்த போலீஸார்
6 பேர் கொலையான வீடு தீப்பிடித்த சம்பவம் : மூன்று பேர் கால்தடம் பதிவு செய்த போலீஸார்
6 பேர் கொலையான வீடு தீப்பிடித்த சம்பவம் : மூன்று பேர் கால்தடம் பதிவு செய்த போலீஸார்
பனமரத்துப்பட்டி: சேலம், தாசநாயக்கன்பட்டியில் ஆறு பேர் கொலை செய்யப்பட்ட வீட்டின் அறை தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில், மூன்று பேரின் கால்தடம் மற்றும் கால்ரேகையை, தடய அறிவியல் துறை போலீஸார் பதிவு செய்து, சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
சி.பி.சி.ஐ.டி., போலீஸார், கொலை நடந்த குப்புராஜ் வீட்டை பூட்டி, 'சீல்' வைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று, முன்தினம் மாலை, 4 மணியளவில், போலீஸாரின் கண்காணிப்பில் இருந்த குப்புராஜ் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், குப்புராஜ், சந்தானலட்சுமி, கவுதம் ஆகிய மூவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்த, படுக்கை அறை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. தகவலறிந்த, சேலம் எஸ்.பி., மயில்வாகனன், ரூரல் டி.எஸ்.பி., வைத்தியலிங்கம் ஆகியோர், தீ விபத்து ஏற்பட்ட அறையை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் துறை போலீஸார், தீ பிடித்து எரிந்த அறை, வராண்டா, மொட்டைமாடி, படுக்கை அறை பின்புறம் உள்ள ஜன்னல் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது, பெட்ரோலை விட வேகமாக தீப்பற்றி, எரியக்கூடிய, 'தின்னர்' என்ற திராவகத்தை பயன்படுத்தி தீ வைக்கப்பட்டதாக தெரியவந்தது. அதற்கான தடயத்தை, தடய அறிவியல்துறை போலீஸார் சேகரித்துள்ளனர்.