/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பிராந்தி பாட்டில்கள் பதுக்கல்: அ.தி.மு.க., பிரமுகர் கைதுபிராந்தி பாட்டில்கள் பதுக்கல்: அ.தி.மு.க., பிரமுகர் கைது
பிராந்தி பாட்டில்கள் பதுக்கல்: அ.தி.மு.க., பிரமுகர் கைது
பிராந்தி பாட்டில்கள் பதுக்கல்: அ.தி.மு.க., பிரமுகர் கைது
பிராந்தி பாட்டில்கள் பதுக்கல்: அ.தி.மு.க., பிரமுகர் கைது
ADDED : செப் 28, 2011 01:00 AM
சிதம்பரம் : சிதம்பரம் அருகே பிராந்தி பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த அ.தி.மு.க., பிரமுகரை போலீசார் கைது செய்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.சிதம்பரம் அடுத்த பு.முட்லூர் நாகவள்ளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 48; அ.தி.மு.க., பிரமுகர்.இவர் வீட்டில் புதுச்சேரி மாநில பிராந்தி பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சிதம்பரம் ஏ.எஸ்.பி., துரை, இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் ராதாகிருஷ்ணன் வீட்டில் சோதனை மேற்கொண்டு அங்கு பதுக்கி வைத்திருந்த 283 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து வழக்குப் பதிந்து ராதாகிருஷ்ணன், அவரது உறவினர் கணேஷ்குமார், 24, ஆகியோரை கைது செய்தனர்.