/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/108 ஆம்புலன்ஸில் "இன்குபேட்டர்' திருப்பூரில் செயல்படுத்த ஆயத்தம்108 ஆம்புலன்ஸில் "இன்குபேட்டர்' திருப்பூரில் செயல்படுத்த ஆயத்தம்
108 ஆம்புலன்ஸில் "இன்குபேட்டர்' திருப்பூரில் செயல்படுத்த ஆயத்தம்
108 ஆம்புலன்ஸில் "இன்குபேட்டர்' திருப்பூரில் செயல்படுத்த ஆயத்தம்
108 ஆம்புலன்ஸில் "இன்குபேட்டர்' திருப்பூரில் செயல்படுத்த ஆயத்தம்
ADDED : ஜூலை 11, 2011 09:36 PM
திருப்பூர் : இலவச 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிறக்கும் பச்சிளம்
குழந்தையின் உயிர்காக்க, 'இன்குபேட்டர்' என்ற வெப்ப நிலை அறியும் கருவி
பொருத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
கடந்த ஆட்சியின்போது, 2008
டிச.,ல் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது. விஷக்கடி, விபத்து,
பிரசவம், தீக்காயம், நெஞ்சுவலி உள்ளிட்ட அவசர காலங்களில் இச்சேவை
மக்களுக்கு பயன்படுகிறது. கர்ப்பிணிகள் ஏற்கனவே டாக்டர்களிடம் ஆலோசனை
பெற்றிருந் தாலும், பிரசவ வலி நேரங்களில் அவசர உதவிக்கு 108க்கு
அழைக்கின்றனர். ஆம்புலன்ஸில் பிறக்கும் குழந்தைக்கு உடனடியாக முதல்கட்ட
சிகிச்சை அளிக்க, உடல் வெப்பநிலை அறியும் 'இன்குபேட்டர்' வசதி செய்யப்பட
உள்ளது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் வரும்போது பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை
குறைவு; அதற்குள் பணியாளர்கள் மருத்துவ மனைக்கு கர்ப்பிணிகளை அழைத்து
வந்து விடுகின்றனர். இருப்பினும், 'இன்குபேட்டர்' வெப்ப நிலை அறிந்து
கொள்ளும் கருவி ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக
சென்னையில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. திருப்பூர் உள்ளிட்ட மற்ற
பகுதிகளிலும் விரைவில் இவ்வசதி செய்யப்பட உள்ளது.