Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சந்தேக நபர்கள் கைரேகை பதிவு

சந்தேக நபர்கள் கைரேகை பதிவு

சந்தேக நபர்கள் கைரேகை பதிவு

சந்தேக நபர்கள் கைரேகை பதிவு

ADDED : ஜூலை 11, 2011 09:35 PM


Google News
பல்லடம் : பல்லடம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிபவர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

அவர்களின் கைரேகைகளை பதிவு செய்தும் வருகின்றனர். பல்லடம் ஒன்றியப் பகுதியில் கடந்த மூன்று வாரங்களில் மூன்று வீடுகள், ஒரு மெடிக்கல் ஸ்டோர். அனுப்பட்டி கோவில் உட்பட்ட ஐந்து இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்துள் ளன. இதனால், பொதுமக்கள் பீதி அடைந் துள் ளனர். வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்ல தயங்குகின்றனர்.நள்ளிரவில் பல்லடம் பகுதியில் சுற்றித்திரியும் சந்தேகத்துக்குரிய நபர்களை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். எந்த ஊர், எந்த கம்பெனியில் வேலை பார்க்கிறார்; பார்க்கும் வேலை என்ன என விசாரணை நடத்தி, முகவரியை பதிவு செய்கின்றனர். மிகவும் சந்தேகத்துக்கு உரிய நபர்களிடம் கைரேகைகளை பதிவு செய்கின்றனர். அவற்றை, திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகளில் சிக்கிய, பழைய குற்றவாளிகளின் கைரேகையோடு ஒப்பிட்டு பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us