Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கலெக்டர் தகவல் உரிய ஆவணம் வழங்கி கல்விக் கடன் பெறலாம்

கலெக்டர் தகவல் உரிய ஆவணம் வழங்கி கல்விக் கடன் பெறலாம்

கலெக்டர் தகவல் உரிய ஆவணம் வழங்கி கல்விக் கடன் பெறலாம்

கலெக்டர் தகவல் உரிய ஆவணம் வழங்கி கல்விக் கடன் பெறலாம்

ADDED : ஆக 21, 2011 02:36 AM


Google News

நாமக்கல்: 'கடந்த மாதம் நடந்த கல்விக் கடன் வழங்கும் முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியர், உரிய ஆவணங்களை ஒப்படைத்து, கல்விக்கடன் பெற்றுக் கொள்ளலாம்' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், திருச்செங்கோடு, நாமக்கல், கொல்லிமலை ஆகிய இடங்களில், கடந்த ஜூலை மாதம் 16, 17, 30 ஆகிய தேதிகளில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடந்தது.

அந்த முகாமில் பெறப்பட்ட விண்ணப்பம் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கல்விக்கடன் பெற தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தரப்பட்டு, கல்விக் கடன் பெற்று வருகின்றனர். அந்த முகாமில் பங்கு பெற்ற மாணவர்கள், உரிய விண்ணப்பங்கள் மற்றும் சான்றுகளை சமமந்தப்பட்ட வங்கிகளில் வழங்காததால், கல்விக் கடன் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே, மாணவர்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட வங்கிகளை அணுகி உரிய ஆவணங்களை ஒப்படைத்து, கல்விக் கடன் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us