ADDED : செப் 25, 2011 01:15 AM
அவிநாசி :அவிநாசியில் அமைய வுள்ள ஓட்டுச்சாவடிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.அவிநாசி பேரூராட்சி பகுதியில் 19 மற்றும் ஒன்றிய பகுதியில் 167 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
அவிநாசி, திருமுருகன்பூண்டி பேரூராட்சிகளுக்கு அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஒன்றிய பகுதிகளுக்கு பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல் நிலைப்பள்ளியிலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இப்பள்ளிகளில் நேற்று கலெக்டர் மதிவாணன், திடீர் ஆய்வு மேற்கொண் டார்; ஓட்டு பெட்டிகளின் பாதுகாப்பு, மின் வசதி குறித்து பள்ளி தலைமையாசிரியர் சரவணபவன், தேர்தல் அலுவலர்கள் குட்டிநாடான், பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.கலெக்டர் கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகள், எண்ணிக்கை மையங்கள் ஆய்வு செய்யப்பட்டு வரு கின்றன. திங்கட்கிழமை மாலை அனைத்து பகுதிகளும் ஆய்வு செய்யப் பட்டு, அன்று மாலை, உத்தரவு வழங்கப்படும்,'' என்றார்.