Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/லே-அவுட் அமைக்க விளைநிலங்கள் அழிப்பு விவசாய பரப்பு குறைகிறது

லே-அவுட் அமைக்க விளைநிலங்கள் அழிப்பு விவசாய பரப்பு குறைகிறது

லே-அவுட் அமைக்க விளைநிலங்கள் அழிப்பு விவசாய பரப்பு குறைகிறது

லே-அவுட் அமைக்க விளைநிலங்கள் அழிப்பு விவசாய பரப்பு குறைகிறது

ADDED : ஆக 05, 2011 01:33 AM


Google News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் லே-அவுட் அமைப்பதற்காக விவசாய விளை நிலங்கள் அழிக்கப்படுகிறது. இதனால் விவசாய பரப்பு சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.பொள்ளாச்சி தாலுகா கேரளா எல்லையை ஒட்டியுள்ளதாலும், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் லே-அவுட் தொழில் சூடுபிடித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், பொள்ளாச்சியில் அதிகளவில் 'லே-அவுட்' அமைக்கப்பட்டு இடம் விற்பனை செய்யப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளாக லே-அவுட் அமைப்பது குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக லே-அவுட் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.பொள்ளாச்சியில் கோவை ரோடு, உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு, நடுப்புணி ரோடு, மீன்கரை ரோடு, வால்பாறை ரோடு, பல்லடம் ரோட்டில் லே-அவுட் களின் எண்ணிக்கையும், குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.சைட் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், தென்னை விவசாயம் அழிக்கப்பட்டு புதிதாக லே-அவுட்கள் உருவாக்கப்படுகின்றன. விலைக்கு வாங்கியிருந்த தோப்புகளில் உள்ள தென்னை மரங்கள் வேரோடு தோண்டி எடுக்கப்பட்டு, சைட்டுக்கு இடம் பிரிக்கப்படுகிறது.

பொள்ளாச்சி மீன்கரைரோடு, நடுப்புணி ரோடுகளில் மொத்தம் ஐந்து இடங்களில் லே-அவுட்கள் அமைக்கப்படுகிறது.லே-அவுட் உரிமையாளர்கள் கூறுகையில், 'இரண்டு ஆண்டுகளாக இடம் விற்பனையாவது குறைந்திருந்ததால் புதிதாக லே-அவுட் அமைக்கவில்லை. தற்போது, விற்பனைக்கு இடம் இல்லாததால் ஒவ்வொரு பகுதியிலும் புதிதாக லே-அவுட் அமைக்கப்படுகிறது. விளைச்சல் இல்லாத விளை நிலங்களில் தான் லே-அவுட் அமைக்கப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கு பாதிப்பில்லை. லே-அவுட்டில் ஒரு சென்ட் 30 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது' என்றனர்.

விவசாயிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் மானாவாரி நிலப்பரப்பு குறைந்து விட்டது. கேரளா மற்றும் திருப்பூரை சேர்ந்தவர்கள் விவசாய விளை நிலங்களை வாங்கி, லே-அவுட்களாக பிரிக்கின்றனர்.தென்னந்தோப்புகளை விலைக்கு வாங்குவோர், அவற்றை பராமரிக்காததால் விளைச்சல் குறைந்து விடுகிறது. அதன்பின், மரம் காய்ப்பதில்லை என்று கூறி லே-அவுட் அமைக்கின்றனர். இதனால் விவசாய நிலப்பரப்பின் சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.விவசாய விளை நிலங்களில் லே-அவுட் அமைப்பதை தடுக்க அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் விவசாயம் அழிந்து விடும். உணவு உற்பத்தி செய்யும் நிலை மாறி, உணவுக்காக கையேந்தும் நிலை உருவாகும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us