ADDED : ஜூலை 25, 2011 10:25 PM
ஆண்டிபட்டி : அ.தி.மு.க.,பொதுக்கூட்டம் ஆண்டிபட்டியில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் பால்பாண்டியன் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் ஈஸ்வரி, ஒன்றிய துணைச்செயலாளர் அமரேசன் முன்னிலை வகித்தனர்.
தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., தவசி, பொதுக்குழு உறுப்பினர் அருணாசலம் ஆகியோர் பேசினர். எம்.ஜி.ஆர்.,மன்ற இணைசெயலாளர் செந்தில் பரமசிவம், மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன், ஜெ.,பேரவை மாவட்ட செயலாளர் வரதராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் லோகிராஜன், முன்னாள் நகரசெயலாளர் முத்துவெங்கடராமன், கவுன்சிலர் முருகன்,உட்பட பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.


