Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தொழில் பயிற்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தொழில் பயிற்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தொழில் பயிற்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தொழில் பயிற்சி

ADDED : ஆக 05, 2011 02:45 AM


Google News

திருவள்ளூர் : பல்வேறு தொழிற்பயிற்சிகள், மாற்றுத் திறனாளிகளுக்காக இலவசமாக நடத்தப்படுகின்றன.

இலவசமாக நடத்தப்படும் இத்தொழில் பயிற்சிகளில் சேர விரும்புவோர், திருவள்ளூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என்று, திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ்சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.மாற்றுத்திறனாளிகள் தொழில் திறனை வளர்த்திட, அவர்களுக்கு தேவையான தொழில் பயிற்சிகளை அரசும், தொண்டு நிறுவனங்களும் இலவசமாக வழங்கி வருகின்றன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேறிய அல்லது தவறிய 30 வயதுக்கு உட்பட்ட, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக தட்டச்சு பயிற்சி, தையல் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி போன்றவைகள், இலவசமாக தொண்டு நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.மேலும், அரசு சார்பில் கைகள் நல்ல நிலையில் உள்ள, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு லேப் டெக்னீசியன் பயிற்சி, மொபைல் போன் சீர் செய்யும் பயிற்சியும் வழங்கப்படுகின்றன.இலவச விடுதி: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, பைண்டிங் பயிற்சி இலவச விடுதி வசதியுடன் பூந்தமல்லியில் நடத்தப்படுகிறது.18 வயது முதல் 40 வயது வரையிலான பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர், பைண்டிங்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்இந்த இலவச பயிற்சிகளை பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள், தங்களது பெயர், முகவரி,கல்வித் தகுதி, தொடர்பு தொலைபேசி எண் ஆகியவற்றுடன் தாங்கள் பெற விரும்பும் பயிற்சி குறித்த விவரத்தையும், குறிப்பிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகலுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருவள்ளூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us