/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஏரி ஆக்கிரமிப்பு செய்த இருவர் அதிரடி கைதுஏரி ஆக்கிரமிப்பு செய்த இருவர் அதிரடி கைது
ஏரி ஆக்கிரமிப்பு செய்த இருவர் அதிரடி கைது
ஏரி ஆக்கிரமிப்பு செய்த இருவர் அதிரடி கைது
ஏரி ஆக்கிரமிப்பு செய்த இருவர் அதிரடி கைது
ADDED : ஜூலை 30, 2011 01:02 AM
தலைவாசல்: தலைவாசல் அருகே பொதுப்பணித்துறை ஏரி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக, இரு விவசாயிகளை, போலீஸார் கைது செய்தனர்.
தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் அருகில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. அதில், பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம், 1.62 ஏக்கர் நிலத்தில் தினசரி காய்கறி மார்க்கெட்டாக பயன்படுத்தி வந்தனர். கடந்த மாதம், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி ஏரி ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றம் செய்து கரை அமைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள், ஏரிக்கரையை உடைத்து மண் சமன் செய்துள்ளனர். அதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செந்தில்குமார், தலைவாசல் போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில், ஏரி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதாக, விவசாயிகள் செல்வம் (45), ராமர் (50) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகிய நான்கு பேரை, போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.