Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நாங்கள் ஹேப்பி தம்பதிகள்! சொல்கிறார் கேட்டி ஹோம்ஸ்

நாங்கள் ஹேப்பி தம்பதிகள்! சொல்கிறார் கேட்டி ஹோம்ஸ்

நாங்கள் ஹேப்பி தம்பதிகள்! சொல்கிறார் கேட்டி ஹோம்ஸ்

நாங்கள் ஹேப்பி தம்பதிகள்! சொல்கிறார் கேட்டி ஹோம்ஸ்

ADDED : செப் 05, 2011 04:40 PM


Google News
Latest Tamil News
ஹாலிவுட்டின் ஹாட் தமபதிகள் என்று வர்ணிக்கப்படும் டாம் க்ரூயிஸ் மற்றும் கேட்டி ஹோம்ஸ் பற்றி அவ்வப்போது ஏதாவது செய்திகள்,வதந்திகள் வந்து கொண்டே தான் இருக்கும். டாம் க்ரூயிசின் மில்லியன் டாலர் மாளிகையில் கேட்டி ஒரு சிறைப்பறவையாக இருப்பதாக அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டது. மாளிகையில் இருந்து வெளியேறி டாம் க்ரூயிசின் மற்றொரு கெஸ்ட் ஹவுசில் கேட்டி அவரது குழந்தையுடன் சிறிது காலம் இருந்து வந்தார்.அதுவும் டாம் தம்பதியினரிடையே விரிசல் என்றே பேசப்பட்டது. இவற்றையெல்லாம் இருவரும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த கேட்டி, தான் தனது கணவருடன் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் , விரைவில் திருமணம் முடிந்த 5வது ஆண்டு விழாவை கொண்டாட இருக்கும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களது திருமண நாள் கொண்டாட்டுத்துக்காக பல திட்டங்கள் போட்டுள்ளோம். குழந்தை சூரியடன் நேரம் போவதே தெரியவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானும் என் கணவரும் குழுந்தைகள் போல் சிறு சிறு விளையாட்டுகளை விளையாடுகிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மெகா ஸ்டாரின் மனைவியாக இருப்பதால், தன்னையும் துரத்தும் ரசிகர்களை எப்படி சமாளிப்பது என்பதை தன் கணவரிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளதாகவும் கேட்டி தெரிவித்திருக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us