/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் தற்காலிக பணியாளர் நேர்காணல்அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் தற்காலிக பணியாளர் நேர்காணல்
அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் தற்காலிக பணியாளர் நேர்காணல்
அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் தற்காலிக பணியாளர் நேர்காணல்
அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் தற்காலிக பணியாளர் நேர்காணல்
ADDED : ஆக 22, 2011 10:59 PM
கோவை : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கணக்கு ஆய்வாளர் , கம்ப்யூட்டர் விவர பதிவாளர்கள் பணியிடங்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
வேலை வாய்ப்பு அலுவலகம் அளித்த பதிவு மூப்பு பட்டியலின் அடிப்படையில் 198 பேருக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டன. முதல் கட்டமாக நேற்று 118 பேர் பங்கேற்றனர்; மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி, மாவட்ட துவக்க கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் முருகன் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கலைவாணி ஆகியோர் தலைமை தாங்கினர். பங்கேற்றவர்கள், நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, நேர்காணல் நடந்தது. கணக்கு ஆய்வாளர் பணியிடத்துக்கு 40 பேரும், கம்ப்யூட்டர் விவர பதிவாளருக்கு 20 பேர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடத்துக்கு 20 பேர் என மொத்தம் 90 பேர் தற்காலிக பணியாளர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர். கணக்கு ஆய்வாளர் பணியிடத்துக்கு தகுதியாக பி.காம்., படிப்புடன் டேலியும், கம்ப்யூட்டர் விவர பதிவாளர்களுக்கு பி.இ., அல்லது எம்.சி.ஏ., படிப்பும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்ஸ் பணியிடத்துக்கு ஏதேனும் பட்டப்படிப்புடன், பி.சி.ஏ., மற்றும் தட்டச்சுப் படிப்பில் ஹையர் மற்றும் லோயர் கட்டாயம் முடித்திருக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு, பணி அனுபவம், கூடுதல் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் இறுதியில் தனி நேர்காணல் நடக்கிறது. கலெக்டர் மேற்பார்வையின் பேரில் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். கணக்கு ஆய்வாளருக்கு ரூ. 6,000, கம்ப்யூட்டர் விவர பதிவாளருக்கு ரூ. 8,000, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு ரூ.6,000 தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. இரண்டாவது நாளாக இன்று நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க 145 பேருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (பயிற்சி) விஜயலட்சுமி, மூத்த ஆசிரியர் பயிற்றுனர் கிருபா மனோன்மணி ஆகியோர் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர்.