ADDED : செப் 21, 2011 12:59 AM
தூத்துக்குடி:பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தின்
பல இடங்களில் ஒரு சில அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது.
இதனை தடுப்பதற்காக
தூத்துக்குடி மாவட்டத்தில் செல்லக்கூடிய பஸ்களில் போலீசார் அதிரடி சோதனை
நடத்தினர்.பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான சம்பவம்
தொடர்ந்து கடந்த 11ம் தேதிமுதல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து
தலைவர்கள் சிலைகள், முக்கிய இடங்களில் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் முதல்
மாசார்பட்டி வரையிலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று போலீசார்
பஸ்சில் அதிரடி சோனை நடத்தினர். பஸ்சில் செல்லும் பயணிகள் உடைமைகளை சோதனை
நடத்தினர். நெடுஞ்சாலை ரோடுகளில் விடிய, விடிய போலீசார் ரோந்து பணியில்
ஈடுபட்டனர். மேலும் இரவு நேரங்களில் செல்லக்குடிய பஸ்களில் மாற்று உடையில்
போலீசார் கண்காணித்து வருகின்றனர்.