கிள்ளை : சிதம்பரம் அடுத்த முழுக்குத்துறையில் தென்னரசன் கபடி குழு சார்பில் 30ம் ஆண்டு கபடி போட்டி நடந்தது.கடலோர மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கிராம தலைவர் வெற்றி தலைமை தாங்கினார். மணிமாறன் வரவேற்றார். முதல் நான்கு இடங்களை பெற்ற அணிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், சிறந்த ஆட்டக்காரர்களுக்கு பரிசு மற்றும் சுழற்கோப்பையை முன்னாள் மீனவர் நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, கிள்ளை நகர செயலர் விஜயன், கலியமூர்த்தி ஆகியோர் வழங்கினர்.


