/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஹிந்தி தேர்வு குறித்து 31ம் தேதி கருத்தரங்கம்ஹிந்தி தேர்வு குறித்து 31ம் தேதி கருத்தரங்கம்
ஹிந்தி தேர்வு குறித்து 31ம் தேதி கருத்தரங்கம்
ஹிந்தி தேர்வு குறித்து 31ம் தேதி கருத்தரங்கம்
ஹிந்தி தேர்வு குறித்து 31ம் தேதி கருத்தரங்கம்
ADDED : ஜூலை 28, 2011 03:08 AM
ஈரோடு: ஈரோடு பிரப் ரோட்டில் மத்திய அரசின் மானியத்தில் செயல்படும் ஹிந்தி
சேவை அமைப்பான ஈரோடு மாவட்ட ஹிந்தி பிரேமி மண்டல் சார்பில் ஒரு நாள் ஹிந்தி
கருத்தரங்க வகுப்பு 31ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை,
பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
நடக்கிறது.
ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள ஹிந்தி தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள்
சிறப்பான மார்க் பெறுவது தொடர்பாக வழிகாட்டும் வகையிலான கருத்தரங்காக இது
அமையும். 20க்கும் மேற்பட்ட ஹிந்தி ஆசிரியர்கள் மூலம் சந்தேகங்களுக்கு
ஆலோசனை வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை மண்டலின் தலைவர் ஐயப்பன், செயலாளர்
கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் தேவிபிரசாத் ஆகியோர் செய்து வருகின்றனர்.