பிரதமரை தேர்ந்தெடுக்க கெடு நீடிப்பு
பிரதமரை தேர்ந்தெடுக்க கெடு நீடிப்பு
பிரதமரை தேர்ந்தெடுக்க கெடு நீடிப்பு
ADDED : ஆக 22, 2011 03:55 AM
காட்மாண்டு: நேபாள நாட்டின் பிரதமர் ஜலால் நாத் கனால் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து பிரதமரை தேர்ந்தெடுக்க அதிபர் ராம் பரண் யாதவ் 21-ம் தேதி வரை கெடு நிர்ணயித்திருந்தார்.
ஆனால் மாவோயிஸ்ட் கட்சியும், ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி இடையே பிரதமரை தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்து உருவாகததால் அதிபர் ராம்பரண் யாதவ் மேலும் மூன்று நாட்கள் கெடுவை நீடித்துள்ளார்.601 உறுப்பினர்களை கொண்ட நேபாள நாட்டின் பார்லிமென்டிற்கு எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி முறை அமைக்கப்பட்டது. அதன்பின்னர் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் இதுவரையில் குழப்ப நிலையே இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 35-வது பிரதமராக ஜலால் நாத் கனால் பதவி ஏற்றார். ஆனால் அவரது நிர்வாகத்தில் குறை ஏற்பட்டதால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேபாளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பது குறித்து ஐ.நா பொதுசெயலாளர் பான்கிமூன் ஆசிய பசிபிக் நாடுகளின் அரசியல் விவகாரங்களை கவனிக்கும் டாம்ரட் சாமுவேலிடம் ஆலோசித்தாக கூறப்படுகிறது.