/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/கும்பகோணம் அருகே டாஸ்மாக் கடைஅமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்புகும்பகோணம் அருகே டாஸ்மாக் கடைஅமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
கும்பகோணம் அருகே டாஸ்மாக் கடைஅமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
கும்பகோணம் அருகே டாஸ்மாக் கடைஅமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
கும்பகோணம் அருகே டாஸ்மாக் கடைஅமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
ADDED : ஆக 03, 2011 12:32 AM
கும்பகோணம்: கும்பகோணம் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு கிராம மக்கள்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கும்பகோணம் அரசு மருத்து வமனை
பின்புறத்திலிருந்து உமாமகேஸ்வரபுரம் செல்லும் கிராம சாலை காவிரி ஆற்றை
ஒட்டினாற் போல் உள்ளது.
இந்த ஆற்றங்கரையில் பைபாஸ் பாலத்தை கடந்து அருகில்
உள்ள திருபுவனம் கம்பகரே ஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனியார்
ஒருவர் வாங்கி அதில் டாஸ்மாக் கடை கட்டி வருவதாக தகவல் கிராம மக்களுக்கு
பரவியது.இதையடுத்து நேற்று உமாமகேஸ்வரபுரம், சாரங்கபாணி புளியம்பேட்டை,
மாலையிருப்பு, நடுவக்கரை ஆகிய கிராமங்களை சேர்ந்தவர் கள் ஒன்று திரண்டு
காவிரி ஆற்றின் கரையில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என தெரிவிப்பு
தெரிவித்தனர்.புளியம்பேட்டையைச் சேர்ந்த மதி என்பவர் கூறுகையில், ''இந்த
பைபாஸ் ரோட்டினை ஒட்டினாற்போல் காவிரி ஆறும், பள்ளியும் உள்ளது. இந்த
பள்ளிக்கும், கும்பகோணம் அரசு மருத்துவ மனைக்கும் செல்ல இதுவே பிரதான
சாலையாகும். இந்த சாலையை தினமும் ஆயிரகணக் கானோர் பயன்படுத்தி வருகி
ன்றனர். இந்லையில் காவிரி ஆற்றின் படித்துறையை ஒட்டி டாஸ்மாக் கடை அமைக்க
கட்டுமானப்பணி நடக்கிறது. இதை உடனடியாக றுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள்
அரசுக்கும், மாவட்ட ர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்,'' என்றார்.