ADDED : ஆக 30, 2011 09:41 PM
காஞ்சிபுரம் : மனைவியைக் காணவில்லை, எனக் கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
கூடுவாஞ்சேரி தாய்மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சந்தியா, 23. இவர், 26ம் தேதி மாலை 3 மணிக்கு, கோவிலுக்கு செல்வதாகக் கூறி, வெளியே சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பெருமாள், கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


