Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/3 மாதங்களில் 47 பேர் கைது : 70 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு : எஸ்.பி. தகவல்

3 மாதங்களில் 47 பேர் கைது : 70 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு : எஸ்.பி. தகவல்

3 மாதங்களில் 47 பேர் கைது : 70 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு : எஸ்.பி. தகவல்

3 மாதங்களில் 47 பேர் கைது : 70 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு : எஸ்.பி. தகவல்

ADDED : ஜூலை 24, 2011 01:00 AM


Google News

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் 931 பேருக்கு 1 போலீஸ் என்ற விகிதாச்சாரத்தில் போலீசார் உள்ளனர் என மாவட்ட எஸ்.பி.

தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் செயின் பறிப்பு, வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு என சமீபகாலமாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்தது. திருட்டை தடுக்க மாவட்ட எஸ்.பி. அருண் பல்வேறு வியூகங்களை வகுத்து போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் ஒவ்வொரு சப் டிஜிஷனுக்கும் ஒரு தனிப்படை, மாவட்ட அளவில் டி.எஸ்.பி. செல்வராஜ் தலைமையில் ஒரு தனிப்படை என 5 தனிப்படைகள் அமைத்தார். மேலும் இரண்டு அதிரடிப்படையும் அமைத்தார்.



சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வரும் இடங்கள், திருவிழாக்கள் நடக்கும் இடங்கள் உட்பட அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் அதிரடிப்படையை அனுப்பினார். அதோடு குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையினர் முடுக்கி விடப்பட்டனர். மேலும் கூடுதல் செக் போஸ்டுகள் அமைக்கப்பட்டன. நாகர்கோவில் நகருக்கு வரும் அனைத்து ரோடுகளிலும் செக் போஸ்ட் அமைக்கப்பட்டது. இதனால் நகரில் செயின் பறிப்பு, திருட்டு போன்ற செயல்களில் ஈடுபடுவோர் தப்பி ஓட முடியாத நிலை ஏற்பட்டது. மாவட்ட எஸ்.பி.யின் இந்த அதிரடி நடவடிக்கையால் குற்றங்கள் குறையத்துவங்கியுள்ளது.



இது குறித்து மாவட்ட எஸ்.பி. அருண் கூறியதாவது: மாவட்டத்தில் செயின் பறிப்பு, திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்தது. கடந்த மூன்று மாதங்களில் மொத்தம் 94 சம்பவங்கள் நடந்துள்ளது. குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் 5 தனிப்படை மற்றும் 2 அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றங்கள் குறைந்துள்ளது. அதோடு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 47 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 266 பவுன் தங்க நகைகள், 4 லேப் டாப், 9 நான்கு சக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மொத்த மதிப்பு 70 லட்சத்து, 51 ஆயிரத்து, 486 ரூபாய் ஆகும். குமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் போலீஸ் பணி காலி இடங்கள் இல்லை. தற்போது பயிற்சி போலீசாரும் பணியில் இருப்பதால் கூடுதல் போலீசாரே உள்ளனர். தற்போது மாவட்டத்தில் பொது மக்கள், போலீஸ் விகிதாச்சாரம் 931 பேருக்கு 1 போலீஸ் என்ற நிலை உள்ளது. மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் ஏ, பி, சி என மூன்றாக தரம் பிரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கோப்புகள் அளவில் அனைத்து பணிகளும் முடிந்துள்ளன. அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டதும் புதிய பலத்துடன் பணிகள் துவங்கும். அதன்பின் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் கூடுதல் பணி இடங்கள் உருவாக்கி நிரப்பப்படும். இவ்வாறு எஸ்.பி. அருண் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us