ADDED : ஆக 11, 2011 04:48 AM
கோத்தகிரி:கோத்தகிரியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வள மையம்
சார்பில், மாற்று திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கோத்தகிரி தாசில்தார் ஜோகி துவக்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர்
ஜோஸ்வா முன்னிலை வகித்தார். கோத்தகிரி உதவித் தொடக்க கல்வி அலுவலர் தேசிங்
மற்றும் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு)
பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
அரசு மேல்நிலை பள்ளியில் துவங்கிய ஊர்வலம் காமராஜர் சதுக்கம், ராம்சந்த்
வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது.