/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/தேசிய நீர்ப்பரிசு ரூ. 10 லட்சம் பெற புதுகை மாவட்டத்தினருக்கு அழைப்புதேசிய நீர்ப்பரிசு ரூ. 10 லட்சம் பெற புதுகை மாவட்டத்தினருக்கு அழைப்பு
தேசிய நீர்ப்பரிசு ரூ. 10 லட்சம் பெற புதுகை மாவட்டத்தினருக்கு அழைப்பு
தேசிய நீர்ப்பரிசு ரூ. 10 லட்சம் பெற புதுகை மாவட்டத்தினருக்கு அழைப்பு
தேசிய நீர்ப்பரிசு ரூ. 10 லட்சம் பெற புதுகை மாவட்டத்தினருக்கு அழைப்பு
ADDED : ஆக 09, 2011 02:12 AM
புதுக்கோட்டை: மத்திய அரசிடமிருந்து 10 லட்சம் ரூபாய் தேசிய நீர்ப்பரிசு
பெற விரும்பும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய நபர்கள்
மற்றும் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.புதுக்கோட்டை கலெக்டர் மகேஸ்வரி
வெளியிட்டுள்ள அறிக்கை:மழை நீர் சேகரிப்பின் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை
அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசின் நீர்
ஆதாரத் துறையின் சார்பில் தேசிய நீர்ப்பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
வசிப்பிடம் அல்லது குடியிருப்புகளை சுற்றி மழைநீர் சேகரிப்பு அமைப்புகள்
மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய்
ரொக்கப்பரிசுடன் அத்தாட்சி சான்றிதழும் வழங்கப்படும்.செயற்கை முறையில்
நிலத்தடி நீர் செறிவூட்டுதல், மறு பயன்பாட்டுக்காக சுழற்சி முறையில்
சுத்திகரிப்பு செய்தல் உள்ளிட்ட முன்னோடி அமைப்புகள்
ஏற்படுத்தியுள்ளவர்களுக்கு தேசிய நீர்ப்பரிசாக ரூ.10 லட்சம் மற்றும்
சான்றிதழ் வழங்கப்படும்.மழைநீர் சேகரிப்பு மற்றும் மறு பயன்பாட்டுக்காக
கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் அமைப்புகளை ஏற்படுத்தியுள்ள தனிநபர்கள்,
தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள்,
தொழிற்சாலைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.அதன்படி, மத்திய அரசிடமிருந்து
ரொக்கப்பரிசு பெற விரும்பும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய
நபர்கள் மற்றும் அமைப்புகள் விண்ணப்பங்களை வரும் 10ம் தேதிக்குள் மாவட்ட
கலெக்டருக்கு அனுப்பவேண்டும்.


