/உள்ளூர் செய்திகள்/தேனி/தேனி அரசு ஆஸ்பத்திரிகளில் எக்ஸ்ரே எடுப்பதில் சிக்கல்தேனி அரசு ஆஸ்பத்திரிகளில் எக்ஸ்ரே எடுப்பதில் சிக்கல்
தேனி அரசு ஆஸ்பத்திரிகளில் எக்ஸ்ரே எடுப்பதில் சிக்கல்
தேனி அரசு ஆஸ்பத்திரிகளில் எக்ஸ்ரே எடுப்பதில் சிக்கல்
தேனி அரசு ஆஸ்பத்திரிகளில் எக்ஸ்ரே எடுப்பதில் சிக்கல்
ADDED : ஆக 09, 2011 01:25 AM
தேனி : மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் எக்ஸ்ரே எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஆண்டிபட்டி, சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிகளில் எக்ஸ்ரே பிரிவிற்கு ரேடியோகிராபர், இருட்டறை உதவியாளர், நுண்கதிர் உடனாள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கம்பத்தில் பணிபுரிந்தவர் ஓய்வு பெற்ற பின் அப்பணியிடம் நிரப்பப்படவில்லை. பெரியகுளத்தில் டெக்னீசியன் பயிற்சிக்கு சென்றுள்ளார்.இவை தவிர எல்லா ஆஸ்பத்திரிகளிலும் எக்ஸ்ரே பிரிவில், ரேடியோகிராபர், இருட்டறை உதவியாளர், நுண் கதிர் உடனாள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் ஒரு ஊரில் பணியாற்றும் டெக்னீசியன்கள், வாரத்தில் இரண்டு, அல்லது மூன்று நாட்கள் வேறு ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் இரண்டு ஊர்களிலும் பிரச்னை ஏற்படுகிறது. நோயாளிகள் எக்ஸ்ரே எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எக்ஸ்ரே தொழில்நுட்ப பிரிவுகளில் காலியாக உள்ள, அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதே இதற்கு தீர்வாகும்.


