/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ரோட்டில் விபத்துக்களை தவிர்க்க வாகனங்களில் ஒளிரும் "ஸ்டிக்கர்'ரோட்டில் விபத்துக்களை தவிர்க்க வாகனங்களில் ஒளிரும் "ஸ்டிக்கர்'
ரோட்டில் விபத்துக்களை தவிர்க்க வாகனங்களில் ஒளிரும் "ஸ்டிக்கர்'
ரோட்டில் விபத்துக்களை தவிர்க்க வாகனங்களில் ஒளிரும் "ஸ்டிக்கர்'
ரோட்டில் விபத்துக்களை தவிர்க்க வாகனங்களில் ஒளிரும் "ஸ்டிக்கர்'
ADDED : ஆக 09, 2011 01:10 AM
சிவகங்கை : மாவட்டத்தில் ரோடு விபத்துக்களை தவிர்க்க சாலை பாதுகாப்பு திட்டத்தில், 6 லட்ச ரூபாய்க்கு விபத்து தடுப்பு கருவிகள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு சாலை பாதுகாப்பினை வலுப்படுத்த, 2011- 2012ம் ஆண்டிற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில், சிவகங்கை மாவட்டத்தில் ரோடு விபத்துக்களை தவிர்க்க, முக்கிய வளைவுகளில் ஒளிரும் ஸ்டிக்கர், வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர், முக்கிய வளைவுகளில் வேகத்தடை ஒளிரும் விளக்கு பொருத்துவதென முடிவு செய்யப்பட்டது. ரோடு விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்குதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகள் நடத்துவது, ரோட்டில் செல்லும் மாட்டு வண்டி, டூவீலர், கார், டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்களின் பின் பகுதியில் 'ஒளிரும் ஸ்டிக்கர்' ஒட்டுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக 6 லட்சம் ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
'பேரிகாடில் ஸ்டிக்கர்': மாவட்டத்தில் போலீஸ் செக்போஸ்ட்கள் முக்கிய வளைவுகள், ஒரு வழிப்பாதைகளை குறிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள 'பேரிகார்டிலும்' ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்ட எஸ்.பி., பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.


