ADDED : ஜூலை 31, 2011 03:08 AM
கோவை : தன்னை தாக்கிய மாமனார் மற்றும் கணவரின் சகோதரர் மீது நடவடிக்கை
எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்துள்ளார்.பீளமேடு,
பிளேக் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கல்பனா(31).
கணவர் பெயர்
செந்தில் குமார். தனது மாமனார் ரங்கநாதன்(71) மற்றும் கணவரின் சகோதரர்
சுந்தர்ராஜா ஆகியோர் குடும்ப பிரச்னை காரணமாக தன்னை அவதூறாக பேசி,
அடித்ததாக பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் ரங்கநாதனை
கைது செய்துள்ளனர்.