/உள்ளூர் செய்திகள்/மதுரை/வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த எவர்சில்வர் பானைகள் பறிமுதல்வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த எவர்சில்வர் பானைகள் பறிமுதல்
வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த எவர்சில்வர் பானைகள் பறிமுதல்
வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த எவர்சில்வர் பானைகள் பறிமுதல்
வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த எவர்சில்வர் பானைகள் பறிமுதல்
ADDED : செப் 28, 2011 01:18 AM
கள்ளிக்குடி : கள்ளிக்குடி அருகே உள்ள டி.கொக்குளம் பஞ்சாயத்து தலைவி
பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
தற்போது தலைவியாக இருந்து
பதவிக்காலம் முடிந்த இந்திரா மனுத்தாக்கல் செய்துள்ளார். இவரை எதிர்த்து
இதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவி ரத்தினம் மனைவி பாண்டியம்மாள்
போட்டியிட உள்ளார். இவர்களுக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது.இதே
பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு மகாலிங்கம் என்பவர்
போட்டியிடுகிறார். நேற்று இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக
149 எவர்சில்வர் பானைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய
தகவல் கிடைத்தது. கூடக்கோவில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர்
சென்றனர். மகாலிங்கம் வீட்டில் இல்லை. வீட்டின் பூட்டை உடைத்து பானைகளை
கைப்பற்றி தேர்தல் அலுவலர் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தனர். தலைமறைவான
மகாலிங்கத்தை போலீசார் தேடிவருகின்றனர்.