/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மலை தேனீக்கள் கொட்டி 16 பேருக்கு சிகிச்சைமலை தேனீக்கள் கொட்டி 16 பேருக்கு சிகிச்சை
மலை தேனீக்கள் கொட்டி 16 பேருக்கு சிகிச்சை
மலை தேனீக்கள் கொட்டி 16 பேருக்கு சிகிச்சை
மலை தேனீக்கள் கொட்டி 16 பேருக்கு சிகிச்சை
ADDED : ஆக 28, 2011 12:06 AM
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம்.
நேற்று காலை இவருடைய நிலத்தில் களை எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அந்த பகுதியில் பெரிய காட்டுவாகை மரத்தின் உச்சியில் பெரிய மலை தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. நேற்று காலை 11 மணிக்கு திடீரென தேனீக்கள் பறந்து பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளை கொட்டின. இதில் முருகேசன், சம்பத்குமார் உட்பட 16 பேர் பாதித்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.ஒலக்கூர் வட்டார மருத்துவ அலவலர் டாக்டர் சாந்தி மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார்.


