எழும்பூர் ரயில் நிலையத்தில் 2 ஆயிரம் கிலோ அரிசி பறிமுதல்
எழும்பூர் ரயில் நிலையத்தில் 2 ஆயிரம் கிலோ அரிசி பறிமுதல்
எழும்பூர் ரயில் நிலையத்தில் 2 ஆயிரம் கிலோ அரிசி பறிமுதல்
ADDED : செப் 30, 2011 02:14 AM
சென்னை : எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் செல்லவிருந்த, 2,000 கிலோ ரேஷன் அரிசியை, ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை, எழும்பூரில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா செல்லும் சர்க்கார் எக்ஸ்பிரஸ், ஐதராபாத் செல்லும் காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில்களில், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் தனிப்படையினர் சோதனை செய்தனர்.
முன்பதிவு செய்யப்படாத பெட்டியில், பயணிகள் இருக்கைக்கு கீழே, ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. மொத்தம், 2,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதன் உரிமையாளர்கள் யார் என்று கேட்டும், யாரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையினர், ரேஷன் அரிசியை மீட்டு, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.