ADDED : செப் 21, 2011 01:02 AM
தூத்துக்குடி: குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி மீனவ மக்கள் மீது மோதி
படுகாயமடையச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
நடந்தது.
குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி மீனவ மக்கள் மீது மோதி படுகாயமடையச்
செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், படுகாயமடைந்தவர்களுக்கு
சரியான சிகிச்சையளிக்காத அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை
எடுக்க கோரியும் தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மீன்பிடி, சங்குகுளி மற்றும்
கடல் சார்ந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்
நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக மீன்பிடி, சங்குகுளி மற்றும் கடல்
சார்ந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். மாநிலக்குழு
உறுப்பினர் ஜெயக்குமார், ஜனநாயக உப்பு தொழிலாளர் சங்க தலைவர் பால்ராஜ்
தமிழரசன், செயலாளர் சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.