பென்ஷன் தொகை உயர்வு : கோயில் பணியாளர் எதிர்பார்ப்பு
பென்ஷன் தொகை உயர்வு : கோயில் பணியாளர் எதிர்பார்ப்பு
பென்ஷன் தொகை உயர்வு : கோயில் பணியாளர் எதிர்பார்ப்பு
ADDED : செப் 04, 2011 01:23 AM
தேனி: தமிழ்நாடு ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர் நல்வாழ்வு சங்கம் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நேரம் பார்க்காமல், தெய்வப்பணியாற்றி வரும் கோயில் பணியாளர்கள் அனைவருக்கும், 800 ரூபாய் பென்ஷன் வழங்கப்படுகிறது.
இதை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதிய திட்டத்தை குடும்ப ஓய்வூதிய திட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்கள் புண்ணிய தலங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளனர்.