/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாநகராட்சி கவுன்சிலர் பதவி பா.ம.க., தாராளம் பிற சமூகத்துக்கு 50% ஒதுக்கீடுமாநகராட்சி கவுன்சிலர் பதவி பா.ம.க., தாராளம் பிற சமூகத்துக்கு 50% ஒதுக்கீடு
மாநகராட்சி கவுன்சிலர் பதவி பா.ம.க., தாராளம் பிற சமூகத்துக்கு 50% ஒதுக்கீடு
மாநகராட்சி கவுன்சிலர் பதவி பா.ம.க., தாராளம் பிற சமூகத்துக்கு 50% ஒதுக்கீடு
மாநகராட்சி கவுன்சிலர் பதவி பா.ம.க., தாராளம் பிற சமூகத்துக்கு 50% ஒதுக்கீடு
சேலம்: சேலம் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு, பா.ம.க., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், 50 சதவீதம் பிற சமூகத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களில், வெளியிடப்பட்ட மூன்று வேட்பாளர் பட்டியலில், 31 பேர் மட்டுமே வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்கள். பா.ம.க., சார்பில், சேலம் மாநகராட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பிற சமூகத்தை சார்ந்த வேட்பாளர்கள் விபரம்: மாநகராட்சி 4வது வார்டு- பாய்காரர் சுந்தர்ராஜன், 12வது வார்டு- கவுரி, 13வது வார்டு- ராஜகோபால், 19வது வார்டு- சுசீலா, 20வது வார்டு- செல்வம், 22வது வார்டு- கலைச்செல்வி, 40வது வார்டு- டேவிட்ராஜ், 44வது வார்டு- சிவகாசி அர்ச்சுணன், 45வது வார்டு- பவானிராஜா, 47வது வார்டு- மேத்தா அர்ஜூனன் என மொத்தம் 10 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் பிரிவில் முஸ்லீம்களுக்கு, 11வது வார்டு- சையத் ரபிக், 31வது வார்டு- தாரா பேகம், 33வது வார்டு- முகமது அலிஜின்னா, 34வது வார்டு- கலாம், 41வது வார்டு- ஜென்னத்மகபூவி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சோழிய வேளாளர் சமூகத்தில் 48வது வார்டு- தமிழரசி செல்வராஜ், 49வது வார்டு- மருதபிள்ளை, 53வது வார்டு- ரமணி பாலசந்தர் ஆகியோருக்கும், செட்டியார் சமூகத்தில், 35வது வார்டு- ரேவதி, 46வது வார்டு- பாவா பழனிசாமி, 55வது வார்டு- பிரேமா ஆகிய மூன்று பேருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கவுன்டர் சமூகத்தில், 29வது வார்டு- செல்வம், 38வது வார்டு- பாலமுருகன் என இரண்டு பேருக்கும், சவுராஷ்டிரா சமூகத்தில், 30வது வார்டு- கோபி, நாயுடு சமூகத்தில் 28வது வார்டு- கணேஷ்குமார், போயர் சமூகத்தில் 8வது வார்டு- ஈஸ்வரி, சங்கமர் சமூகத்தில் 56வது வார்டு- குமார், முதலியார் சமூகத்தில், 36வது வார்டு- காளமேகம் ஆகியோருக்கும் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகாரட்சி, 21வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மாதையனுக்கு பா.ம.க., ஆதரவு தெரிவித்துள்ளது. 31 வார்டுகளில் வன்னியர் சமூகத்தினர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.