/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/புறவழிச்சாலை அமைத்து நான்கு வழிச்சாலை ஏற்படுத்த தீர்மானம்புறவழிச்சாலை அமைத்து நான்கு வழிச்சாலை ஏற்படுத்த தீர்மானம்
புறவழிச்சாலை அமைத்து நான்கு வழிச்சாலை ஏற்படுத்த தீர்மானம்
புறவழிச்சாலை அமைத்து நான்கு வழிச்சாலை ஏற்படுத்த தீர்மானம்
புறவழிச்சாலை அமைத்து நான்கு வழிச்சாலை ஏற்படுத்த தீர்மானம்
ADDED : ஜூலை 26, 2011 09:42 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதியில் அமைக்கவிருக்கும் நான்கு வழிச்சாலையை புறவழிச்சாலை அமைத்து கொண்டு செல்ல வேண்டும் என ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழுத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுப்பிரமணியம், ஆணையாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கிணத்துக்கடவு பகுதியில் அமைக்கப்பட இருக்கும் நான்கு வழிச்சாலை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், பொள்ளாச்சி, கோவை மெயின்ரோட்டில் நடந்து வரும் விபத்துக்களை குறைப்பதற்காக, நான்கு வழிச்சாலை அமைப்பதை வரவேற்கிறோம். ஆனால், கிணத்துக்கடவு பகுதியில் மட்டும் மேம்பாலம் அமைத்து நான்கு வழிச்சாலை கொண்டு செல்வதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 200 அடி இடம் தேவைப்படுகிறது. இதனால், ரோட்டு ஓரங்களில் வியாபாரம் செய்பவர்களும், கட்டட உரிமையாளர்களும் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள். கிணத்துக்கடவு பகுதி, 34 ஊராட்சிகளின் தலைமை இடமாகவும், சுற்று வட்டார கிராமங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்லும், வியாபார தலமாகவும் உள்ளது. கிணத்துக்கடவு தாலுகாவாக உருவாகும் வாய்ப்புகள் உள்ளது. மேம்பாலம் அமைக்கும்போது, வியாபாரம் பாதிக்கப்பட்டு, தாலுகாவாக மாறக் கூடிய வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இதுமட்டுமல்லாமல், ரோட்டு பகுதிகளில் அமைந்துள்ள தனியார் கட்டடம், வியாபாரிகளின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படுவதோடு, அரசு அலுவலகங்களான சார்பதிவாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வங்கி, பொன்மலை வேலாயுதசாமி கோவில் அலுவலகம், கட்டடங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நான்கு வழிச்சாலை திட்டத்தில், ஒட்டன்சத்திரம், ஆயக்குடி, பழநி, மடத்துக்குளம், உடுமலை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் புறவழிச்சாலை அமைப்பது போல, கிணத்துக்கடவுக்கு புறவழிச்சாலை அமைத்தால், இந்நகரம் பாதிப்பில் இருந்து மீட்கப்படும். பெரிகளந்தை ஊராட்சி நாராயணநாயக்கன்புதூரில், ஊரக உள்கட்டமைப்பு மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதி மூலம் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம், உரிய மன்ற உறுப்பினர், குழுத் தலைவர், ஆணையாளர் ஆகியோருக்கு தெரிவிக்காமல், திறப்பு விழா செய்ததை கண்டித்தும், இனிமேல் எந்த கட்டடம் கட்டினாலும், அதன் திறப்பு விழாவிற்கு, மன்ற உறுப்பினர், குழுத்தலைவர், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர் ஆகியோரை வைத்து திறக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கவுன்சிலர்கள், ஒன்றிய பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.