"கல்யாணி' ராகத்தில் கவர்ந்த சஞ்சய்
"கல்யாணி' ராகத்தில் கவர்ந்த சஞ்சய்
"கல்யாணி' ராகத்தில் கவர்ந்த சஞ்சய்
மதுரை : மதுரை பாண்டியன் ஓட்டலில் 'ராகப்பிரியா' மியூசிக் கிளப் இசை விழாவின் மூன்றாவது நாளான நேற்று பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் ரசிகர்களை இசை மழையால் மகிழ்வித்தார்.
ஆடிப்பூர நாளில் ஆண்டாள் பாடிய 'கீசு கீசென்று ஆனை சாத்தன் பேசுகின்ற பேச்சரவம் கேட்டிலையே' என்று மிஸ்ரசாபு தாளத்தில் கௌசீகப்பண்ணில் பாடிய போது, அரங்கில் பக்தி அலை பரவியது. 'கனகாங்கி' ராகத்தில் ஆலாபனை செய்த போது, இவர் 'சச்சின் சுப்பிரமணியமோ' என நினைக்க வைத்தார். 'உள்ளம் உருகி, உருகி அன்பின் வெள்ளம் ஆகாதோ பரமா' என்ற வரிகளில் இசை அருவியாக, வெள்ளமாக பெருகி, அனைவரின் மனதையும் நிறைத்தது. 'கனகாங்கி' ராகத்தில் ஸ்வர கோர்வைகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தன. மெயின் ராகமாக கல்யாணி ராக ஆலாபனை நேர்த்தி. வயலின் இசைத்த வரதராஜனும் கல்யாணி ராகத்தை மெருகேற்றினார். முத்துசாமி தீட்சிதர் இயற்றிய கமலாம்பா நவா வர்ணத்தில் உள்ள 'கமலாம்பா பஜரே ரே மானஸ' என்ற கிருதியை சஞ்சய் பாடும் போது திருவாரூர் ஸ்தலத்தின் மகிமையை இசையால் உணர முடிந்தது.


