ADDED : ஜூலை 27, 2011 11:14 PM
பண்ருட்டி : பண்ருட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கால்நடை பராமரிப்பு மற்றும் சிகிச்சை முகாம் சீரங்குப்பம், ஆண்டிக்குப்பம் பகுதியில் நடந்தது.ரோட்டரி சங்கத் தலைவர் மதன்சந்த் தலைமை தாங்கினார்.
கவுன்சிலர் வைத்தியலிங்கம், சமுதாய பணி இயக்குனர் சந்திரசேகர், மாவட்ட துணை ஆளுனர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.முகாமினை சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். 48 பசுக்களுக்கு சினை ஊசியும், 130 பசுக்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கி மருந்து போடப்பட்டன.முகாமில் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் ராமமூர்த்தி, சந்தானகிருஷ்ணன், விஜயராஜ், தேர்வு தலைவர் மதிவாணன், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம், செயலர் வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.