/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஏவிஎம் ஆஸ்பத்திரியில் நவீன ஸ்கேன் துவக்கம்ஏவிஎம் ஆஸ்பத்திரியில் நவீன ஸ்கேன் துவக்கம்
ஏவிஎம் ஆஸ்பத்திரியில் நவீன ஸ்கேன் துவக்கம்
ஏவிஎம் ஆஸ்பத்திரியில் நவீன ஸ்கேன் துவக்கம்
ஏவிஎம் ஆஸ்பத்திரியில் நவீன ஸ்கேன் துவக்கம்
ADDED : ஜூலை 15, 2011 03:26 AM
தூத்துக்குடி:தூத்துக்குடி ஏவிஎம்., ஆஸ்பத்திரியில் 4 கோடி ரூபாயில் நவீன
தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கேன் துவங்கப்பட்டது.
64 ஸ்லைஸஸ் சிடி ஸ்கேன்
தற்போது மருத்துவதுறையில் அதிநவீன ஸ்கேன் ஆகும். இருதயநோய் உள்ளதா என்பதை
கண்டறிய உடலில் துளையிடாமல் மிகச் சரியாக கணிக்கக்கூடியது. இரண்டு நிமிட
நேரத்தில் இச்சோதனை முடிந்துவிடும், இதற்காக ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக
சேர தேவை இல்லை. சோதனையின் போது இருதயநோய் உள்ளது என்று வந்தாலும் சரி,
இல்லை என்ற வந்தாலும் சரி அது 99 சதவீதம் சரியாகவே இருக்கும். இந்த ஸ்கேன்
மூலம் உடலில் துளையிடாமல் இருதயத்தின் ரத்த ஓட்டத்தை பரிசோதனை செய்திட
முடியும். மேலும் உடலில் அனைத்து உறுப்புகளின் ரத்த நாளங்களை பரிசோதனை
செய்திடவும், தண்டுவடம் மற்றும் எலும்பு காயங்களை மிகத்துல்லியமாக
கண்டறியவும் முடியும். பக்கவாத நோயாளிகளுக்கு துரித பரிசோதனை அளிக்க
முடியும். மதுரைக்கு அடுத்து தென்பகுதியில் தூத்துக்குடி ஏவிஎம்
ஆஸ்பத்திரியில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் இந்த நவீன
தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கேன் இடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி
வ.உ.சிதம்பரனார் துறைமுக சேர்மன் சுப்பையா ஸ்கேனை துவக்கி வைத்தார்.
ஏ.விஎம்.வி. மணி,ஏ.விஎம்.வி. முத்துராஜ், ஏ.வி. எம்.வி. ராமர், டாக்டர்
எம்.வி. லட்சுமணன், டாக்டர் எம்.கணேஷ், மாரிமுத்து ஆகியோர்
வரவேற்றனர்.விழாவில் ஏ.பி.சி.வி.சண்முகம், பாஸ்கர் மற்றும் டாக்டர்கள்
கலந்து கொண்டு வாழ்த்தினர்.