பொய் சொல்கிறது சி.பி.ஐ.,: ராஜா வாதம்
பொய் சொல்கிறது சி.பி.ஐ.,: ராஜா வாதம்
பொய் சொல்கிறது சி.பி.ஐ.,: ராஜா வாதம்
ADDED : செப் 30, 2011 12:01 PM
புதுடில்லி: ஒரு கோர்ட்டில் 2ஜி வழக்கு விசாரணை முடிந்து விட்டதாக கூறும் சி.பி.ஐ., மற்றொரு கோர்ட்டில் விசாரணை நடந்து வருவதாக, வழக்கு விசாரணையின் போது ராஜா வக்கீல் தெரிவித்தார்.
2ஜி வழக்கு விசாரணை தற்போது டில்லியில் நடந்து வருகிறது. இதில் வாதிட்ட ராஜாவின் வக்கீல், ராஜாவின் வாதம் முடிந்த பின்னர் தற்போது ஐ.பி.சி., 409ன் கீழ் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு தான் பதிலளிக்கப்போவதில்லை என்றும், ஒரு ஒரு கோர்ட்டில் 2ஜி வழக்கு விசாரணை முடிந்து விட்டதாக கூறும் சி.பி.ஐ., மற்றொரு கோர்ட்டில் விசாரணை நடந்து வருவதாக பொய் சொல்வதாகவும் தெரிவித்தார். மேலும், வழக்கு குறித்து விசாரணை நடத்தி வரும் 2 சி.பி.ஐ., அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.