Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தீத்தடுப்பு செயல்விளக்கம்

தீத்தடுப்பு செயல்விளக்கம்

தீத்தடுப்பு செயல்விளக்கம்

தீத்தடுப்பு செயல்விளக்கம்

ADDED : ஜூலை 11, 2011 09:52 PM


Google News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சமத்தூர் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணி குறித்த செயல் விளக்கம் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், சமத்தூர் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நேற்று தீத்தடுப்பு மற்றும் மீட்பு குறித்து செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் வரவேற்றார்.

பொள்ளாச்சி தீயணைப்பு துறை அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கோவை மாவட்ட தீத்தடுப்பு குழு நிலைய அலுவலர் தவுலத் முகமது பேசியதாவது:நாம் வசிக்கும் பகுதிகளில், எதிர்பாராமல் தீ விபத்து ஏற்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதும், மற்ற இடங்களை பரவுவதை தவிர்க்கவும், உயிர் சேதம் ஏற்படாமல் இருக்கவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தீ விபத்து குறித்து விழிப்புணர்வு கிடைக்க வேண்டும். தீ சிறிய அளவில் ஏற்பட்டால், நமக்கு கிடைக்கும் பொருட்களை கொண்டு அணைக்கவும், தீயணைப்பு துறைக்கு தகவல் தரவும் தெரிந்திருக்க வேண்டும், என்றார்.நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.யானை தாக்கி வாலிபர் பலிஆனைமலை ஆனைமலை அடுத்த டாப்சிலிப் எருமைப்பாறை பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார்(24). கூலித்தொழிலாளி. இவருக்கு நிசாந்தினி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். டாப்சிலிப்பில் யானை பரணி(28)யுடன் சவாரி முடிந்த பின்பு நேற்றுமுன்தினம் மாலை யானைகளின் பாகன்கள் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது யானை பரணியின் அருகில் திலீப்குமார் சென்றுள்ளார். யானை திடீரென திலீபனை தும்பிக்கையால் தாக்கியுள்ளது. அடிபட்ட அவர் வனத்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அவரை வேட்டைகாரன்புதூர் அரசு மருத்துமனைக்கு வனத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்தார். ஆனைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, யானைகளின் அருகில் பாகன்களை தவிர யாரையும் போகவேண்டாம் என்று கூறினாலும் அருகில் சென்றுவிடுகின்றனர். பாகன்கள் இல்லாத நேரத்தில் யானையின் அருகில் திலீப்குமார் சென்றுள்ளார். இதனால் யானை அவரை தாக்கியுள்ளது, என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us