/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கூடுதலாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி இல்லை: எஸ்.பி.,கூடுதலாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி இல்லை: எஸ்.பி.,
கூடுதலாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி இல்லை: எஸ்.பி.,
கூடுதலாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி இல்லை: எஸ்.பி.,
கூடுதலாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி இல்லை: எஸ்.பி.,
ADDED : ஆக 11, 2011 11:14 PM
திருப்பூர் : ''கடந்தாண்டை விட கூடுதலாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதியில்லை,'' என எஸ்.பி., பாலகிருஷ்ணன் கூறினார்.
அவர், நிருபர்களிடம் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழா நெருங்குவதால், இந்து அமைப்பு சார்ந்த இயக்கங்களை அழைத்து, ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும்; கடந்த முறை வைக்கப்பட்ட எண்ணிக்கையிலேயே சிலைகள் வைக்க அனுமதிக்கப்படும். கூடுதலான இடங்களில், கூடுதலான எண்ணிக்கையில் சிலைகள் வைக்க அனுமதி இல்லை. கடந்த ஆண்டில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களிலேயே விசர்ஜன ஊர்வலமும் அனுமதிக்கப்படும். கடந்த முறை கடைபிடிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் இம்முறையும் இருக்கும். ஐகோர்ட் விதித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றி, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் சிலைகளை தயார் செய்ய வேண்டும்; எளிதில் கரையக்கூடிய வகையில், ஓடக்கூடிய நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க வேண்டும். கெமிக்கல் பொருட்களை சிலை தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. வேதியியல் சாராத, இயற்கையான சாயங்களை மட்டுமே சிலைகளுக்கு பயன்படுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 'சென்சிட்டிவ்' பகுதிகள்; கடந்த ஓராண்டில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் பதற்றமான பகுதிகளை அடையாளம் கண்டறிதல்; அப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம், அன்னிய நபர்களின் வருகை, சந்தேகப்படும்படியான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும்; ரோந்து போலீசார், உளவுப்பிரிவு போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். தேவையான இடங்களில் 'பிக்கெட்டிங்' அமைத்து, வாகன சோதனை நடத்தப்படும். கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தியின்போது, திருப்பூரில் 172; அவிநாசியில் 84; பல்லடத்தில் 126; உடுமலையில் 129; தாராபுரத்தில் 92; காங்கயத்தில் 62 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன; அதே எண்ணிக்கையில் வைத்துக்கொள்ள இம்முறையும் அனுமதிக்கப்படும், என்றார்.