Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மாநகராட்சி, கலெக்டர் ஆஃபிஸில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

மாநகராட்சி, கலெக்டர் ஆஃபிஸில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

மாநகராட்சி, கலெக்டர் ஆஃபிஸில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

மாநகராட்சி, கலெக்டர் ஆஃபிஸில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

ADDED : ஆக 19, 2011 11:06 PM


Google News
திருச்சி: முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்தநாளையொட்டி திருச்சி கலெக்டர் அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் அதிகாரிகளும், ஊழியர்களும் நல்லிணக்கநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவின் பிறந்தநாளையொட்டி, இன்று (20ம் தேதி) முதல், செப்டம்பர் ஒன்பதாம் தேதி வரை நல்லிணக்க வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் அதிகாரிகளும், ஊழியர்களும் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். * திருச்சியில் கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில், கலெக்டர் அலுவலக அதிகாரிகளும், ஊழியர்களும் நல்லிணக்கநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது கலெக்டர் உறுதிமொழியை படிக்க, அதை திரும்பச் சொல்லி அனைத்து அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், திருச்சி டி.ஆர்.ஓ., மாணிக்கம், வேளாண்மை இணை இயக்குனர் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாலசுப்பிரமணியன், செல்வராணி, கோமதிசங்கர், ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். * திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கமிஷனர் வீரராகவ ராவ் தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நல்லிணக்கநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் நகர இன்ஜினியர் ராஜாமுகமது, செயற்பொறியாளர் சந்திரன், உதவி கமிஷனர்கள் தனபாலன், தயாநிதி, கவுன்சிலர்கள் மீனா, இனிக்கோ ஆரோக்கியமேரி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us