சாத்தான்குளம்:சாத்தான்குளத்தில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி விழா நடந்தது.சாத்தான்குளம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஸ்வ பிரம்மாவிற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.
நகைத்தொழிலாளர் சங்கத் தலைவர் ராமசாமி, செயலாளர் சரவணன், கோயில் அறங்காவலர்கள் ஆறுமுகம், தங்கவேல், பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விஸ்வகர்மா இளைஞர் நற்பணி மன்றத்தார் செய்திருந்தனர்.