Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கவுன்சிலர் வேட்பாளரை மாற்றக்கோரி திருச்சி அ.தி.மு.க., ஆஃபீஸ் முற்றுகை

கவுன்சிலர் வேட்பாளரை மாற்றக்கோரி திருச்சி அ.தி.மு.க., ஆஃபீஸ் முற்றுகை

கவுன்சிலர் வேட்பாளரை மாற்றக்கோரி திருச்சி அ.தி.மு.க., ஆஃபீஸ் முற்றுகை

கவுன்சிலர் வேட்பாளரை மாற்றக்கோரி திருச்சி அ.தி.மு.க., ஆஃபீஸ் முற்றுகை

ADDED : அக் 03, 2011 03:01 AM


Google News

திருச்சி: திருச்சி மாநகராட்சி எட்டாவது வார்டில் வேட்பாளரை மாற்றக்கோரி மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருச்சி மாநகராட்சி எட்டாவது வார்டில் அ.தி.மு.க., சார்பில் சுதாகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த முறை தேவதானம் முருகேசன் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, தோல்வியடைந்தார். இந்த முறையும் 8வது வார்டில் தனக்கு 'சீட்' ஒதுக்கும்படி முருகேசன் பணம் கட்டியிருந்தார். ஆனால், சுதாகாருக்கு கவுன்சிலர் 'சீட்' ஒதுக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த தேவதானம் முருகேசன், நேற்று காலை தனது ஆதரவாளர்களுடன் தில்லைநகரில் உள்ள திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் அலுவலகத்தை முற்றுகையிட்டார்.

ஆனால், மனோகரன் அங்கு இல்லை. பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார், 'இது தேர்தல் விதிமீறலாகும். உங்கள் மீது தேர்தல் விதிமீறியதாக வழக்கு தொடுக்கப்படும்' என்று மிரட்டியதை அடுத்து, தேவதானம் முருகேசன் தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு நடையை கட்டினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us