Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தேர்தல் நேரத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கல்

தேர்தல் நேரத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கல்

தேர்தல் நேரத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கல்

தேர்தல் நேரத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கல்

ADDED : அக் 05, 2011 02:51 AM


Google News
ஈரோடு:உள்ளாட்சிப் பதவிக்காலம் முடிவதற்குள், ஈரோடு, திருப்பூர் மாவட்ட பஞ்சாயத்துக்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலெக்ஷன் பார்க்கவும், தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளவும் விதிமீறி குடிநீர் இணைப்பு தந்ததால், தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் நடக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் களம் காண வேண்டுமென்ற எண்ணத்தில், ஆறு மாதத்துக்கு முன்பிருந்தே, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் காய் நகர்த்த துவங்கிவிட்டனர். குறிப்பாக பஞ்சாயத்து பகுதிகளில் தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளவும், கடைசி நேரத்தில் கலெக்ஷன் பார்க்கவும் பல்வேறு விதிமீறல்களிலும், பல பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 343 பஞ்சாயத்துகளில் பெரும்பாலானவற்றில் நூற்றுக்கணக்கான குடிநீர் இணைப்புகள் விதிமீறி வழங்கப்பட்டுள்ளன. குடிநீர் இணைப்பு உள்ள வீட்டுக்கு, மேலும் ஒரு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து பகுதியிலுள்ள பெரிய தொழில் நிறுவனங்களுக்கு, ஏராளமான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், தங்கள் உறவினர்கள், வேண்டியவர்களிடம் கலெக்ஷன் பார்த்து விட்டு, கூடுதல் குடிநீர் குழாய் இணைப்பு, சொத்து வரி குறைப்பு போன்றவற்றை நிறைவேற்றி கொண்டனர். மீண்டும் போட்டியிட்டால் வெற்றிபெற வேண்டுமென்ற எண்ணத்தால் மட்டுமின்றி, இனிமேல் இந்த பதவிக்கு வரப்போவதில்லை; இருக்கும் போதே வேண்டியவர்களுக்கு ஆதாயத்தை செய்து கொடுத்து, சம்பாதித்துக் கொள்வோம் என்ற எண்ணத்திலும் விதிமீறல்களை செய்துள்ளனர்.ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளில் விதிமீறிய குடிநீர் குழாய் இணைப்புகளால், தண்ணீர் வரத்துக்கு அதிகமாக குடிநீர் குழாய் இணைப்புகளின் எண்ணிக்கை சென்றது. ஏற்கனவே, இணைப்பு உள்ளவர்களுக்கும், மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுபவர்களுக்கும் கூடுதலாக தண்ணீர் கிடைக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கும், பொது குழாய்களை நம்பியுள்ளவர்களுக்கும் தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது.பல பஞ்சாயத்துப் பகுதிகளில் குடிநீர் ஆதாரம் குறைந்து, குடிநீருக்கு மக்கள் திண்டாடும் நிலை உருவாகியுள்ளது. பெண்கள் குடங்களுடன் கி.மீ., கணக்கில் நடந்து தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது. புதிதாக அமையவுள்ள உள்ளாட்சி நிர்வாகம், முதல் வேலையாக பஞ்சாயத்துகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையை சீர் செய்ய வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us