/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அரசு பஸ் கண்ணாடி உடைப்பு தென்காசியில் 4 பேர் கைதுஅரசு பஸ் கண்ணாடி உடைப்பு தென்காசியில் 4 பேர் கைது
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு தென்காசியில் 4 பேர் கைது
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு தென்காசியில் 4 பேர் கைது
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு தென்காசியில் 4 பேர் கைது
தென்காசி : தென்காசியில் அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு தூத்துக்குடியில் இருந்து கேரள மாநிலம் சங்கனாச்சேரிக்கு தமிழக அரசு விரைவு பஸ் சென்றது. இந்த பஸ்சை கோவில்பட்டி நடராஜபுரம் சிங்காரவடிவேலன் (32) ஓட்டி சென்றார். முத்துமணி என்பவர் கண்டக்டராக இருந்தார். பஸ் தென்காசி அரசு கால்நடை ஆஸ்பத்திரி அருகே சென்ற போது 5 பேர் கொண்ட கும்பல் கைகளில் அரிவாள், கம்பு, கல் உள்ளிட்ட ஆயுதங்கள் ஏந்தி பஸ்சை வழிமறித்தனர். அவர்கள் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் பஸ்சை தீ வைத்து கொளுத்தி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். கல் வீச்சில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.
இச்சம்பவம் பற்றி தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்தார். டி.எஸ்.பி. பாண்டியராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் திருப்பதி தீவிர விசாரணை நடத்தினார். விசாணையில் பஸ்சின் கண்ணாடியை உடைத்தது தென்காசி சிந்தாமணி தெற்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக் (25), சண்முகம் (22), அம்மன்கோயில் தெருவை சேர்ந்த பிச்சையா மகன் வெங்கடேஷ், கீழத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வீரா (18), சண்முகம் மகன் சிவா (22) என தெரிய வந்தது. இவர்களில் சிவாவை தவிர மற்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சிவாவை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.