/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தூள் பறக்குது "செல்லிங்' தள்ளாட்டம் தாராளம்தூள் பறக்குது "செல்லிங்' தள்ளாட்டம் தாராளம்
தூள் பறக்குது "செல்லிங்' தள்ளாட்டம் தாராளம்
தூள் பறக்குது "செல்லிங்' தள்ளாட்டம் தாராளம்
தூள் பறக்குது "செல்லிங்' தள்ளாட்டம் தாராளம்
ADDED : செப் 02, 2011 11:44 PM
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஒன்றியத்தில் ஆளும்கட்சியினர், போலீஸ் ஒத்துழைப்புடன் 20 இடங்களில், மது விற்பனை (செல்லிங்) அமோகமாக நடக்கிறது.இங்கு ஒரு பேரூராட்சி, 17 ஊராட்சிகள் உள்ளன.
குஜிலியம்பாறை, பாளையம், சேர்வைகாரன்பட்டி, டி.கூடலூர், கூம்பூரில் டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.
ஆனால், ஆளும் கட்சி பிரமுகர்கள், போலீசார் ஆசியுடன் 20 இடங்களில் மது விற்கின்றனர். தனியார் சிமென்ட் ஆலை, கல்குவாரிகள் நிறைந்த பகுதியில், டாஸ்மாக் கடைகள் இல்லாததால், வியாபாரம் களை கட்டுகிறது. லந்தகோட்டை, கன்னிமார்பாளையம், சத்திரப்பட்டி, திருக்கூர்ணம், வெள்ளோடு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை அமோகம். வறட்சி பகுதியான இங்கு, கூலி தொழிலாளர்கள், அனுமதியற்ற மதுக்கடைகளில் பணத் தை இழக்கின்றனர். ஆளும் கட்சியினரின் 'செல்லிங்' வியாபாரம்' மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.