ADDED : ஜூலை 26, 2011 09:43 PM
ஆனைமலை : ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது.
ஆனைமலை பகுதிகளில் 800 ஏக்கருக்கும் அதிகமாக கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளதால் தனியார் கரும்பு ஆலைக்கு வெளிமாநில ஆட்கள் மூலம் கரும்பு வெட்டி அனுப்பப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஒரு டன்னிற்கு 1987.60 ரூபாய் விலை தரப்படுகிறது. தனியார் கரும்பு ஆலைகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக கரும்பு உற்பத்திக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாய் கடனும் பெற்றுத்தரப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கரும்பில் ஆலைகள் சர்க்கரை உற்பத்தி செய்துவிட்டு அதன் கழிவுகளில் உரம் தயாரிக்கும் பணியையும் செய்து வருகிறது. விவசாயக்கூலி ஆட்கள் பற்றாக்குறையால் முன்பிருந்ததை விட கரும்பு உற்பத்தி குறைந்து விட்டதாக விவசாயிகள் கூறினர்.