குன்னூர் நீர்வீழ்ச்சியில் ஈரான் வாலிபர் பலி
குன்னூர் நீர்வீழ்ச்சியில் ஈரான் வாலிபர் பலி
குன்னூர் நீர்வீழ்ச்சியில் ஈரான் வாலிபர் பலி
ADDED : செப் 06, 2011 10:34 PM
குன்னூர்: ஈரான் நாட்டு வாலிபர், குன்னூருக்கு சுற்றுலா வந்த போது நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இறந்தார்.
ஈரான் டெஹ்ரான் பகுதியைச் சேர்ந்தவர் அலிரேஜா நஜ்மி, 20. இவர், பெங்களூரில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் டாக்டருக்கு படிக்க விண்ணப்பித்து, அட்மிஷன் பெற்றுள்ளார். ஊட்டியை சுற்றிப் பார்க்கும் ஆவலில், அவரது அண்ணன் அமித்ரேஜா மற்றும் இரு நண்பர்களுடன் கடந்த இரு நாளுக்கு முன் ஊட்டி வந்து, தனியார் லாட்ஜில் தங்கியுள்ளார். நேற்று சுற்றுலா தலங்களை பார்க்கும் ஆவலில் வந்த அவர்கள், குன்னூர் டால்பின்ஸ்நோஸ் முனைக்கு செல்லும் வழியில் உள்ள கரன்சி நீர் வீழ்ச்சியை கண்டு ரசித்துள்ளனர். நீர் வீழ்ச்சியின் இடையே உள்ள பாறை மீது நின்று, அலிரேஜா, புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். அப்போது, பாறையில் இருந்து தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். மேல் குன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.