/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சாலை விபத்தில் இரண்டாம் இடம்ரூ.1.50 கோடியில் சிகிச்சை மையம்சாலை விபத்தில் இரண்டாம் இடம்ரூ.1.50 கோடியில் சிகிச்சை மையம்
சாலை விபத்தில் இரண்டாம் இடம்ரூ.1.50 கோடியில் சிகிச்சை மையம்
சாலை விபத்தில் இரண்டாம் இடம்ரூ.1.50 கோடியில் சிகிச்சை மையம்
சாலை விபத்தில் இரண்டாம் இடம்ரூ.1.50 கோடியில் சிகிச்சை மையம்
ADDED : ஆக 19, 2011 10:24 PM
திண்டுக்கல்:சாலை விபத்துகளில் திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம் இடத்தை
பிடித்துள்ளது.
இதற்காக தலைமை அரசு மருத்துவமனையில், 1.50 கோடி ரூபாயில்
விபத்து சிகிச்சை பிரிவு திறக்கப்பட உள்ளது. விழுப்புரத்திற்கு அடுத்து
அதிக சாலை விபத்து நடக்கும் மாவட்டம் திண்டுக்கல். பல மாவட்டங்களின்
சந்திப்பாக உள்ளதால் இந்த நிலை. விபத்து எண்ணிக்கை:திண்டுக்கல்
மாவட்டத்தில் 2011 ஜனவரியில் 68, பிப்ரவரியில் 148, மார்ச்சில் 114,
ஏப்ரலில் 130, மேயில் 169, ஜூனில் 193 விபத்துக்கள் நடந்துள்ளன; இதில் 95
பேர் இறந்துள்ளனர்.உடனடி சிகிச்சை: விபத்தில் சிக்குவோருக்கு உடனடி
சிகிச்சை அளிக்க மத்திய அரசு உதவியுடன், திண்டுக்கல் உட்பட எட்டு
மாவட்டங்களில் விபத்து சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில், 1.50 கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உடனடி சிகிச்சைக்கான வசதிகள் உள்ளன. இது
குறித்து மருத்துவ இணை இயக்குனர் ஜெயபால், கண்காணிப்பாளர் சுப்பிரமணி,
எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் வடிவேல் கூறியது:விபத்தில் சிக்குவோருக்கு
17 படுக்கை வசதிகளுடன் அவசர சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டடத்திற்கு 80 லட்சம், உபகரணங்களுக்கு 70 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உயிரிழக்காமல் காப்பாற்ற அனைத்து வசதிகளையும் அரசு செய்து தர உள்ளது. இதை
செப்., 15 ல், முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறப்பார்,
என்றனர்.